மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீடுகட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் குழந்தை சிலை.. புதையலா? மக்கள் வியப்பு.!
வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த குழந்தை வடிவிலான சிலை மற்றும் வளையல்களை வருவாய்த்துறையினர் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் அருகாமையில், கிளிமங்கலம் பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக 5 அடியில் பள்ளம் தோண்டியுள்ளார்.
அந்த பள்ளத்தில் உடைந்த நிலையில் இருந்த மண்பானையில், சுமார் அரை கிலோ மதிப்பிலான குழந்தை வடிவிலான சிலை மற்றும் வளையல் போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன.
இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர், அங்கு வந்து மண்பானையில் கண்டெடுத்த புதையல் பொருட்களை முழுவதுமாக கைப்பற்றி திட்டக்குடியில் உள்ள வருவாய் துறையினருக்கு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.