திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இன்று (டிச. 20) இங்கெல்லாம் மின்தடை.. கடலூர் மாவட்ட மக்களே தயாராக இருங்கள்.!
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ஒவ்வொரு வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்மாற்றிகள் பராமரிப்பு நடைபெறும். அப்போது, மின் சேவை நிறுத்திவைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்.
அந்தவகையில், கடலூரில் உள்ள சித்தரசூர் துணை மின்நிலையத்தில் 20ம் தேதியான நாளை பராமரிப்பு பணிகளின் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்படும்.
அதன்படி அருங்குணம், வானமாதேவி, பாலூர், நடுவீரப்பட்டு, சித்தரசூர், சி.என். பாளையம், பத்திரக்கோட்டை, விளங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், சாத்தியப்பட்டு, சிலம்பிநாதன்பேட்டை, பி.என். பாளையம், மேல்பட்டாம்பாக்கம், வாழப்பட்டு, திருகண்டேஸ்வரம், முல்லிகிராம்பட்டு பகுதியில் மின்னிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.