செல்போனை பறித்ததால் கடும் ஆத்திரம்.. கூலிப்படை ஏவி ஜெயிலரை குடும்பத்துடன் கொளுத்த முயன்ற பயங்கரம்..!!



cuddalore jailor and his family threaten

கடலூர் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் உதவி செயலர் மணிகண்டனை குடும்பத்துடன் மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. 

கடலூர் மத்திய சிறையில் இருக்கும் கைதியான எண்ணூர் தனசேகர் என்பவரிடம் மணிகண்டன் செல்போனை பறித்த ஆத்திரத்தால், கூலிப்படை மூலமாக இந்த கொலை முயற்சியானது நடந்துள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Cuddalore District

உதவி செயலர் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றொரு அறையில் உறங்கியதால் அவர்கள் அனைவரும் உயிர் தப்பியது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.