தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கபாடி போட்டியில் உயிரிழந்த விமல்ராஜின் குடும்பத்திற்கு மேலும் நிதிஉதவி.. தமிழக அரசுக்கு கோரிக்கை.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி அருகே கடந்த 24 ஆம் தேதி நடந்த கபாடி போட்டியில், புறங்கணி கிராமத்தை சேர்ந்த கபாடி வீரர் விமல்ராஜ் மைதானத்திலேயே உயிரிழந்தார். இவரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.3 இலட்சம் நிதிஉதவி அறிவித்த நிலையில், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் வீரரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதிஉதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபாடி கழகம் சார்பில், மாநில தலைவர் சோலையம் ராஜா விமல் ராஜின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.4 இலட்சம் நிதிஉதவி வழங்கினார். சிங்கப்பூர், கடலூர், சிறுதொண்டமாதேவி கபாடி கழகம் சார்பில் ரூ.80 ஆயிரம் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜா, "தமிழக அரசு விமல் ராஜின் குடும்பத்தினருக்கு ரூ.3 இலட்சம் நிதிஉதவி வழங்கியதற்கு நன்றி. அவரின் குடும்பம் ஏழ்மையான குடுப்பான். தமிழக அரசு விமலின் சகோதரி நந்தினியின் கல்வியை தகுதியாக கொண்டு அரசு வேலை வழங்க வேண்டும். இதுகுறித்து முதல்வரை சந்தித்து மனுவழங்கவுள்ளேன். இந்த குடும்பத்திற்கு நாங்க உறுதுணையாக இருப்போம். நந்தினியின் கல்வி செலவை சேலம் சாமி அகாடமி ஏற்றுக்கொள்ளும்" என்று தெரிவித்தார்.