மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தறிகெட்டு இயங்கிய மண் லாரியால் 10 மாத கைக்குழந்தை பலி.. கடலூர் அருகே நெஞ்சை உலுக்கும் சோகம்..!
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில், நெய்வாசல் கிராமத்தில் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிக்கு மணல் ஏற்றிவந்த லாரி அதிவேகத்தில் பயணம் செய்துள்ளது.
ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளாகவே, வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும், வீட்டிற்குள் இருந்த 10 மாத பெண் குழந்தை பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
நிகழ்விடத்தில் குமராட்சி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.