மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காரை இடைமறித்து கடத்தி, கூகுள் பே மூலமாக ரூ.10 ஆயிரம் வழிப்பறி.. மரக்காணம் அருகே பரபரப்பு சம்பவம்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரின்ஸ். இவர் சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், ஏரோனாட்டிகள் மூன்றாம் வருடம் பயின்று வருகிறார். கடலூரில் இருந்து சென்னைக்கு காரில் சென்றுகொண்டு இருந்த நிலையில், இவரின் கார் சம்பவத்தின் போது மரக்காணம் அனுமந்தை சுங்கச்சாவடி அருகே சென்றுள்ளது.
அப்போது, மற்றொரு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், பிரின்சின் காரை இடைமறித்துள்ளது. காரில் இறந்து இறங்கிய 3 பேர், பிரின்ஸை கத்தி முனையில் காருடன் கடத்தி சென்றுள்ளனர். காரில் பயணித்த கும்பல், மரக்காணம் தீர்த்தவாரி சாலை அருகே பணம் கேட்டு மிரட்டியுள்ளது. பிரின்ஸ் தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே, கூகுள் பே மூலமாக பணம் அனுப்ப வைத்துள்ளது.
கூகுள் பே மூலமாக ரூ.10 ஆயிரம் பணம் பரிவர்த்தனை ஆனதும், கொள்ளைக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பிரின்ஸ் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு பின்னர், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட சேகர், சவுபார் சாதிக், அஜித் குமார், பாலமுருகன், வினோத் ஆகிய 5 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.