திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பயங்கரம்.. மனைவியை துடிக்க துடிக்க பிளேடால் அறுத்துக்கொன்ற கணவன்.!!
கடலூர் மாவட்டம் கீழ் அனுப்பப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் சிலம்பரசன். இவர் கடந்த மே மாதம் நான்காம் தேதி அதே ஊரை சேர்ந்த பட்டதாரியான ரோஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு முன் சிலம்பரசன் மூன்று ஆண்டுகள் துபாயில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு தம்பதிக்குள் குடும்பப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்து சிலம்பரசன் பிளேடால் தனது மனைவியின் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். பின் நடந்த சம்பவத்தை கூறி காவல் நிலையத்தில் தானாக சரணடைந்தார்.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்று ரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர், சிலம்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.