மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigNews: 21 வயது இளம்பெண் 3 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. கடலூரில் பேரதிர்ச்சி சம்பவம்..! பதறவைக்கும் பயங்கரம்.!!
காதலனுடன் பேருந்து நிலையத்திற்கு செல்ல முயன்ற இளம்பெண் காதலருடன் தனிமையில் இருக்க, 3 பேர் கும்பல் பெண்ணை பலாத்காரம் செய்த பயங்கரம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண், கடலூரில் உள்ள தனியார் பேப்பர் ஸ்டோரில் பணியாற்றி வருகின்றனர். இதே நிறுவனத்தில் சரவணன் என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், காதலியை அழைத்துக்கொண்டு சரவணன் பேருந்து ஏற்றிவிட சென்றபோது, ரம்மியம்பேட்டை இணைப்பு சாலை பகுதியில் தனிமையில் இருந்துள்ளனர். இதனை அப்பகுதியை சேர்ந்த 3 பேர் வீடியோ எடுத்து மிரட்டி, கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனால் பெண்மணி பலத்த காயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கிஷோர், சதீஷ் மற்றும் ஆரிப் ஆகிய 3 பேரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.