மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: 15 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி தொகுதியில் 2016 - 21 தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக சத்யா பன்னீர் செல்வம் பணியாற்றி வந்தார். சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் டெண்டர் விடுவது தொடர்பாக ரூ.20 இலட்சம் மோசடி செய்ததாக இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதனையடுத்து, இன்று இதுதொடர்பாக பண்ரூட்டி பகுதியில் 6 இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் நடந்த சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
10 மணிநேரத்தை கடந்து நடைபெறும் சோதனை காரணமாக பண்ரூட்டி பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதுகுறித்த தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. அதிமுகவினர் சத்யா பன்னீர் செல்வம் வீட்டின் முன்பு திரண்டு இருக்கின்றனர்.