மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
7 இலட்சம் செலவுப்பு.. இழப்பீடு கொடு..! மணமகனை மாற்றிய பெண்ணுக்கு செக் வைத்த முரட்டு சிங்கிள் மாப்பிள்ளை.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, காடாம்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமணத்தில் மணப்பெண் தனது உறவினர்களுடன் நடனமாடி மகிழ்ந்த நிலையில், ஆவேசமடைந்த மாப்பிளையால் வாக்குவாதம் ஏற்பட்டு திருமணம் நிறுத்தப்பட்டது.
பெண்ணுக்கு குறித்த தேதியில் திருமணம் நடத்துவதில் உறுதியாக இருந்த பெண்தரப்பு வீட்டிற்கு சென்று ஆலோசனை செய்துள்ளது. பின்னர், செஞ்சியை சேர்ந்த உறவினர் மகனை திருமணம் செய்ய பேசி முடிக்கப்பட்டு, மறுநாளில் குறித்த முகூர்த்தத்தில் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. ஆனால், முதலில் மணமகனாக தேர்வு செய்யப்பட்டவர் திருமணம் நின்றுபோனது.
இந்த சம்பவம் பண்ரூட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, கழுத்துவரை மாலை வந்து சென்ற பாதிக்கப்பட்ட மணமகன் ஸ்ரீதர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், நான் எந்த தவறும் செய்யவில்லை. எதற்காக ஆடுகிறாய் என்று கேட்டதற்கு, பெண் தரப்பினர் அவதூறு பேசி, அவர்களாகவே திருமணத்தை நிறுத்திவிட்டனர்.
திருமணம் மற்றும் நிச்சயதார்தத்துக்கு என ரூ.7 இலட்சம் செலவு ஆகியுள்ளது. அதனை பெண் வீட்டாரிடம் இருந்து எனக்கு பெற்றுத்தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.