மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களே கவனம்.. அதிவேகத்தில் பரவிவரும் காய்ச்சல்.. சிகிச்சைக்காக மருத்துவமனையில் குவியும் பொதுமக்கள்..!!
கடலூர் மாவட்டத்தில் பரவிவரும் காய்ச்சலால், அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வானிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் திடீர் மழை மற்றும் அதிக வெயில் மக்களை வாட்டிவதைத்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் காய்ச்சலும் பரவத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சல் மக்களுக்கு பரவி வருகிறது.
இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனையுடன் மக்கள் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.