மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னால் சென்ற லாரி பிரேக் அடித்ததால் பரிதாபம்; காரில் பயணித்த பெண் துடிதுடித்து பலி.!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை, சிதம்பரம் முத்தையா நகர், வள்ளலார் தெரு பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவரின் மனைவி ரமா (வயது 40).
இவர் நேற்று முன் தினம் கடலூரில் இருந்து சிதம்பரத்திற்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளார். பரங்கிப்பேட்டை அருகே உள்ள பி.முட்லூர் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத ரமாவின் கார், லாரியின் பின்புறம் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ரமா பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கிள்ளை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.