மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மழைக்காலத்தில் கவனம் தேவை.. மின்சாரம் தாக்கி தந்தை-மகன் உட்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு..!
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 55). இவரின் மகன் மகனிகண்டன். நேற்று ராமன் தனது வீட்டின் மேல்தளத்தில் காயவைத்த துணிகளை எடுக்க முயற்சி செய்தார். அப்போது, ராமனின் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கவே, அவர் அலறி இருக்கிறார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் மகன் மணிகண்டன் தந்தையை காப்பாற்ற முயற்சித்து மின்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இருவரும் மின்சாரம் தாக்கி மயங்கிவிடவே, அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, மருத்துவர்கள் இருவரையும் பரிசோதனை செய்துவிட்டு உயிரிழப்பை உறுதி செய்தனர்.
இந்த இரண்டு துயரங்களில் இருந்து மீள்வதற்குள், சிறுபாக்கம் அடுத்துள்ள சித்தேரி கிராமத்தை சேர்ந்த முதியவர் பெரியசாமி (வயது 50) அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவங்கள் இரண்டு கிராமத்தையும் பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர். மேலும், வீட்டின் மொட்டை மாடிகளில் மின்சாரம் செல்லும் கம்பிகளுக்கு அருகே துணிகளை காய வைக்க கம்பிகளால் கொடிகட்டும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.