மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 47 வயது அரசு பேருந்து ஓட்டுநர்; பயண பழக்கம் பரிதவிக்கவைத்த சோகம்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அருகேயுள்ள கிராமத்தில், 17 வயது சிறுமி பள்ளிப்படிப்பை நிறைவுசெய்து இருக்கிறார். இவர் தனது குடும்ப வறுமை காரணமாக அங்குள்ள தேநீர் கடையில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் தினமும் அரசு பேருந்தில் வீட்டில் இருந்து கடைக்கு சென்று வந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர் பயணிக்க, அப்போது அரசு பேருந்து ஓட்டுநராக வைத்யநாதபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜா (வயது 47) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறுமியிடம் ஆசையாக பேசி தனது வலையில் வீழ்த்திய ராஜா, அவரை திருமணம் செய்வதாக கூறி தனிமையில் நெருங்கி பழகி அத்துமீறியுள்ளார். இதனால் 17 வயது செருமி கர்ப்பமாகியுள்ளார்.
பின் திருமணம் குறித்து பேசியபோது அவர் மழுப்ப, பாதிக்கப்பட்ட சிறுமி ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் ராஜாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விசாரணையில் ராஜாவுக்கு ஏற்கனவே திருமணமானதும் தெரியவந்துள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.