வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
இரயிலுக்கு அடியில் சிக்கி சுக்குநூறாகிய இருசக்கர வாகனம்; ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய பயணிகள்.!
கடலூர் இரயில் நிலையம் நோக்கி இன்று காரைக்கால் - பெங்களூர் அதிவிரைவு இரயில் வந்துகொண்டு இருந்தது. அச்சமயம் கடலூர் தோப்புக்கொள்ளை பகுதியில் இருசக்கர வாகனத்துடன் 2 பேர் தண்டவாளத்தை கடக்க முயற்சித்தனர்.
தண்டவாளத்தில் சிக்கிய இருசக்கர வாகனம்
அச்சமயம் நடுவழியில் இருசக்கர வாகனம் தண்டவாளத்துக்கு நடுவே சிக்கிக்கொள்ள, இரயில் வந்ததால் உயிர்பயத்தில் இரண்டு இளைஞர்களும் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.
இதையும் படிங்க: #JustIN: அவசர ஊர்தியை இயக்கிய 17 வயது சிறுவன்; 2 பெண்கள் படுகாயம்.. கடலூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.!
இரயில் ஓட்டுனரின் சாமர்த்தியம்
இதனையடுத்து, இரயில் ஓட்டுநர் சுதாரித்து விரைந்து இரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும், இருசக்கர வாகனம் இரயில் அடியில் சிக்கி சுக்குநூறானது. பின் தகவல் அறிந்து வந்த இரயில்வே அதிகாரிகள், கயிறு கட்டி இருசக்கர வாகனத்தை பிடித்துக்கொள்ள, இரயில் பின்னோக்கி இயக்கப்பட்டு வாகனம் மீட்கப்பட்டது.
விபத்து காரணமாக #கடலூர் அருகே
— கடலூர் மாநகராட்சி☔💧🎑 (@CuddaloreC) May 24, 2024
இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் விபத்திலிருந்து தப்பிக்க ரயில்வே தண்டவாளத்தில் வாகனத்தை போட்டுவிட்டு சென்று விட்டனர். இரு சக்கர வாகனம் மீது காரைக்கால் - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது
இ#Cuddalore #TrainAccident pic.twitter.com/gPiur3Jsql
இதையும் படிங்க: லாரி - இருசக்கர வாகனம் மோதி விபத்து; இளைஞர் பரிதாப பலி.!