திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கடலூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் திருநங்கைகளின் அத்துமீறல்: ஆண்களை பார்த்தாலே பணம் பறிப்பு.. ரூ.1 இலட்சம் பறித்த இருவர் கைது.!
கடலூர் பேருந்து நிலையத்தில் மாலை மற்றும் இரவு நேரத்தில் திருநங்கைகள் அவ்வப்போது சில நபர்களிடம் ஆபாசமாக பேசி தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பதாக பல்வேறு புகார்கள் குவிந்து வந்துள்ளன. ஒரு சில நேரம் உல்லாசத்திற்கு அழைத்து ஆண்களிடம் அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை மிரட்டி வாங்கி செல்வதாகவும் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் 3ஆம் தேதி கடலூர் பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்த நிலையில், இரண்டு திருநங்கைகள் உல்லாசத்திற்கு அழைத்துள்ளனர். ரூபாய் 500 கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என பேசப்பட்ட நிலையில், அந்த இளைஞரிடம் கட்டுக்கட்டாக இருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடிய திருநங்கைகள் மிரட்டி அனுப்பி இருக்கின்றனர்.
இதனால் அதிர்ந்துபோன இளைஞர் கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்று உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இரண்டு திருநங்கைகளையும் பிடித்து அவர்களிடம் சோதனை செய்து ரூபாய் 93 ஆயிரம் பணத்தை மீட்டனர். அதேபோல, திருப்பாதிரிபுலியூர் பகுதியில் திருநங்கைகளின் மிரட்டல் செயல்கள் அதிகரித்து வருவதாகவும், சாலைகளில் ஆண்கள் நடந்து சென்றாலே எதையாவது வாங்கலாம் என்ற முயற்சியில் அவர்கள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.