மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டில் இருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: விபரீத முடிவால் பெற்றோர் கண்ணீர்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர், மருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்கு. இவரின் மகள் கல்விக்கரசி. வடலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் செவிலியர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
நேற்று கல்விக்கரசி வீட்டில் இருந்துள்ளார். அச்சமயம் வீட்டிற்கு வந்த அதே பகுதியை சேர்ந்த இளைஞர் பரணீதரன் என்பவர், கல்விக்கரசிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவருகிறது.
இதனால் மனமுடைந்துபோன கல்லூரி மாணவி, தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த வடலூர் காவல் துறையினர், கல்விக்கரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்த நபரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள், ஊர் மக்கள் கடலூர் - விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடலூர் காவல் துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததன்பேரில் அனைவரும் அங்கிருந்து அமைதியாக சென்றனர். விசாரணை நடந்து வருகிறது.