மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனியார் பேருந்து - பைக் மோதல்.. மாமியார் வீட்டிற்கு சென்ற தம்பதி, மைத்துனர் சாலை விபத்தில் பரிதாப பலி..!
கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர், மருதத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரின் மனைவி செல்வராஜ். மைத்துனர் ஆறுமுகம். இவர்கள் 3 பேரும் தங்களின் இருசக்கர வாகனத்தில் பூலாம்பாடி கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது, ஏ.அகரம் கிராமம் அருகே சென்றபோது, எதிர்திசையில் வந்த தனியார் பேருந்து மேற்கூறியவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கருப்பசாமி மற்றும் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
செல்வராணி படுகாயத்துடன் மீட்கப்பட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வேப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.