திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மஞ்சள் நிறத்துடன் விநியோகம் செய்யப்படும் குடிநீரால் சிறுநீரக பாதிப்பு.. கடலூரில் கிராமமே கண்ணீர் குமுறல்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர், மங்களூர் ஒன்றியத்தில் ரெட்டாக்குறிச்சி கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் விநியோகம் செய்யப்படும் குடிநீர், மஞ்சள் நிறத்துடன் உப்பு கலந்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அக்கிராமத்தை சேர்ந்தோர் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த குடிநீரை குளித்தாலோ அல்லது குடித்தாலோ குழந்தைகளுக்கு காய்ச்சல் உட்பட பிற உபாதைகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் கிராம மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.