53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
தகாத வார்த்தையில் திட்டிய கணவன்.. மனைவி எடுத்த விபரீத முடிவால் சோகம்.!
கணவர் தகாத வார்த்தையில் திட்டியதால், மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகாமையில் என்.நாரையூர் கிராமத்தில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவரது மகள் லட்சுமி (வயது 28). இவருக்கும், சேவூர் கிராமத்தில் வசித்து வந்த தினகரன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தினகரன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு லட்சுமி அவருடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது குடும்பத்தில் செலவு அதிகமாக இருப்பதால், செலவுக்கு பணம் அனுப்புமாறு கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழ, இதில் லட்சுமியை தினகரன் தகாத வார்த்தையில் திட்டி, 'பணம், பணம் என்று ஏன் என் உயிரை வாங்குகிறாய்? அனுப்பிய பணத்தை வைத்து செலவு செய்ய முடிந்தால் செய். இல்லையென்றால் பெட்டி படுக்கையோடு உன் வீட்டிற்கு கிளம்பு' என்று கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த லட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், அருகாமையில் இருந்த உறவினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இருப்பினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முன்னதாகவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பின் இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவர, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.