தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மனப்பூர்வமாக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.! நான் அப்படி கிடையாது.! ஓப்பனாக பேசிய அமைச்சர் சிவி சண்முகம்.!
சசிகலாவின் விடுதலைக்கு பிறகு சசிகலா, டிடிவி தினகரனை இணைத்துக் கொள்ள மாட்டோம் என்று அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவே முடியாது என்றும், சசிகலா தன்னை டிடிவி தினகரனிடம் இருந்து காப்பற்றிக் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் டி.டி.வி தினகரனின் தொழிலே 'ஊத்திக்' கொடுப்பதுதான். அவர்களின் குலத்தொழில் ஊத்திக் கொடுப்பது தான் என பேசினார். இதனையடுத்து அமைச்சரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குறிப்பிட்ட சமுதாயம் கடும் கண்டனங்களை எழுப்பியதுடன் அமைச்சர் சிவி சண்முகம் மன்னிப்பு கேட்கவேண்டும், அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைகளை எழுப்பினர்.
இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குறித்து நேற்று தான் பேசியதை சிலர் தவறாக புரிந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், தான் அவ்வாறு கூறியது தவறாகக் கருதியிருந்தால் அதற்காக தான் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
நான், தினகரன் குறித்து கருத்து தெரிவிக்கையில், அவரது குலத்தொழில் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். ஆனால் அதற்கு தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது. குலத் தொழில் என்று சொன்னது அவரது குடும்பத்தை மட்டுமே தெரிவித்தேன். எங்கள் பகுதியில் அவ்வாறு தான் கூறுவோம். அந்த அர்தத்தில்தான் நான் கூறினேன்.
ஆனால் அதை திரித்து ஏதோ ஒரு சமுதாயத்துக்கு எதிராக கருத்துக் கூறியதாக அவர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். எனக்கும், டிடிவி தினகரனுக்கு சில அரசியல் பிரச்சினைகள் இருக்கும். கருத்து சொல்லும் போதும், நையாண்டி கேலி செய்யும் போது, நேரிடையாகக் கருத்து சொல்லி வருகிறோம்.
எந்த நிலையிலும் எந்த சூழலிலும் யாரையும் எப்போதும், மன வருத்தப்படும்படியாக நான் பேசுவது கிடையாது. அந்த எண்ணமும் எனக்கில்லை. நான் 10 ஆண்டு காலம் மதுரையில் படித்தவன், எனக்கு அதிகப்படியான நண்பர்கள் இருப்பது மதுரையில் தான். எனவே நான் கூறியதை அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தவறாக எடுத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில், நான் அதற்காக மனப்பூர்வமாக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.