53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து; சொந்த ஊருக்கு சென்ற காவலர் உட்பட 3 பேர் பரிதாப பலி.!
மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ராகவன் (54). இவர் சென்னையில், சைபர் கிரைம் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
நேற்று தனது குடும்பத்தினருடன் சொந்த ஊர் செல்வதற்காக காரில் பயணம் செய்துள்ளார். காரில் அவரது மனைவி பாண்டீஸ்வரி, மகள் அட்சயா, உறவினர் ராம்குமார் என்ற ராஜேஷ் ஆகியோருடன் பயணம் செய்துள்ளார்.
சென்னையில் இருந்து மதுரை நோக்கி இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், காரினை மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (45) என்பவர் ஓட்டினார்.
இவர்கள் பயணித்த வாகனம் கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரை அடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துள்ளது. அப்போது, முன்னால் இரும்பு பாரம் ஏற்றி சென்றுகொண்டு இருந்த லாரியின் மீது அதிவேகத்துடன் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் ராகவன் மற்றும் ஓட்டுநர் சரவணன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் உடல் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
உறவினர் ராஜேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பாண்டீஸ்வரி மற்றும் அட்சயா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக வேப்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.