#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிலிண்டர் உபயோகிப்பாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. குறைந்தது சிலிண்டர் விலை..!
வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் விலை இந்த மாதம் குறைந்துள்ளது.
சென்னையில் சமையல் எரிவாயு மற்றும் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் எரிவாயுவின் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதம் முழுவதும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. அது போன்று தற்போது இன்றைய மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் வணிகரீதியாக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.36.50 குறைக்கப்பட்டு, சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.2,141-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.