கெட்டுப்போன ஆட்டிறைச்சியை கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!



damage mutton sales


சேலம் மாவட்டத்தில் கெட்டுப்போன, பழைய ஆட்டிறைச்சியை 300 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்யப்படுவது, உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்தது.

தற்போது ஆட்டிறைச்சி கிலோ 600 முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சேலம் மாவட்டம் சூரமங்கலம், சித்தனூர், கொல்லப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆட்டிறைச்சி கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக, சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறைக்கு தகவல் வந்துள்ளது.

mutton

இதனையடுத்து சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் கதிரவன் தலைமையில் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணியளவில், புகாருக்குள்ளான இறைச்சிக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். 

விசாரணையில், வெளியூர்களில் இருந்து பழைய இறைச்சியை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்தும், சிலர் கெட்டுப்போன இறைச்சியையும் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. மேலும் உணவுப்பாதுகாப்பு உரிமம் இன்றி செயல்பட்டு வந்த 35 இறைச்சி கடைகளுக்கு விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பப்பட்டது.