#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடப்பாவமே!! தலைக்கேறிய போதை.. உதவிக்கு சென்ற நபரை கத்திரிக்கோலால் குத்திய போதை ஆசாமி..!
மதுரை மேலூர் அருகே பதினெட்டான்குடியில் இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து இந்த விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் காயம் அடைந்தவர்களை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தது.
இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் கஞ்சா போதையில் இருந்த ஆரப்பாளையத்தை சேர்ந்த முத்துபாரதி என்பவர் ஆம்புலன்ஸில் பணியாளராக இருந்த விமல் மீது கத்திரிக்கோலை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த விமல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கத்தரிக்கோலால் விமலை தாக்கிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.