மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது அப்பாவின் உயிரை காப்பாற்ற அப்பாவிடமே சத்தியம் வாங்கிய 4 வயது சிறுமி! நெகிழ்ச்சி சம்பவம்!
புதுக்கோட்டை மாவட்டம் மன்னர் கல்லூரியில் பணிபுரிந்து வருபவர் உதவி பேராசிரியர் டேவிட். இவரது நான்கு வயது மகள் புதுக்கோட்டையின் நகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இந்த சிறுமி படிக்கும் பள்ளியில் நேற்று (22.01.2020) சாலை விழிப்புணர்வு விழா நடைபெற்றுள்ளது.
அப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு வழிமுறைகளை குறித்து மாணவர்களிடையே உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் பள்ளியில் மாணவ, மாணவிகளிடையே பேசுகையில், சிறுவர்கள் வாகனங்கள் ஓட்ட கூடாது எனவும், இருசக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும், கார்களில் செல்லும் போது கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும் எனக்கூறி, அவ்வாறு நடக்காவிட்டால் ஏற்படும் விளைவுகளை பற்றியும் விவரித்துள்ளார். அது மாணவ மாணவிகளின் மனதில் பசுமரத்தாணி போல் பாதிந்தது.
இதனையடுத்து பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு திரும்பிய கல்லூரி உதவி பேராசிரியர் டேவிட் அவர்களின் மகள் வீட்டிற்கு வந்ததும், தனது அப்பாவை அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று, உடனடியாக தலைக்கவசம் வாங்குமாறு கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இனிமேல் கார் ஓட்டும் போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணிவேன் என்று என்னிடம் சத்தியம் செய்யுங்கள் என கூறியுள்ளார்.
அந்த கல்லூரி உதவி பேராசிரியர் டேவிட் அவர் மகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, அவரது மகளுக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மிகப்பெரிய பெரிய மாற்றத்தின் துவக்கத்தினை சிறு பிள்ளைகளிடமிருந்து ஆரம்பித்த காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.