மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மேக்கப் பொருளை மாமியார் பயன்படுத்தியதால் விவாகரத்து கேட்ட மருமகள்கள்!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் தனது மேக்கப் பொருளை மாமியார் பயன்படுத்தியதால் மருமகள் விவாகரத்து கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன. அதற்கு காரணம் கணவன்-மனைவி இடையே புரிதல் இல்லை என கூறப்பட்டாலும், சில விவகாரமான மற்றும் வித்தியாசமான விவாகரத்து வழக்குகளும் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நூதனமான விவாகரத்து வழக்கு ஒன்று குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. ஆக்ரா பகுதியை சேர்ந்த சகோதரிகள் இருவரை அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதில், முதல் மருமகளின் மேக்கப் பொருட்களை அவருடைய மாமியார் அடிக்கடி பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத மருமகள், மாமியாரிடம் சண்டை போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தனது மகனிடம் கூற அவர் தனது மனைவியை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். வீட்டை விட்டு அக்கா வெளியேறியதால், இளைய மருமகளான தங்கையும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சகோதரிகள் தாய் பேச்சை கேட்டு நடக்கும் கணவர்களுடன் வாழ விருப்பமில்லை என்று விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளனர். மேக்கப் உபகரணத்தை பயன்படுத்திய விவகாரத்தில் இரு தம்பதிகள் விவாகரத்து செய்யும் அளவுக்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.