"இப்பவே ரூ.27 லட்சம் வேணும்" - ரோஹிணிக்கு செக் வைத்த விஜயா.. வைரல் ப்ரோமோ இதோ.!
வேறு சாதி இளைஞரை திருமணம் செய்த பெண்ணை அடித்துக் கொன்ற குடும்பத்தினர்.!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 19). பூவாளூரை சேர்ந்தவர் நவீன் (வயது 19). இவர்கள் இருவரும் பள்ளி காலத்திலேயே காதலித்து வந்த நிலையில், தற்போது இருவரும் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வீட்டிற்கு தெரியாமல் திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொண்டு வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இவர்களது திருமணம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வர, பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் கடந்த ஜனவரி 2ம் தேதி மகளை மீட்டு அவரது குடும்பத்தினரும் அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து, அவரது உடலை எரித்து விட்டதாக நவீனுக்கு அவரது நண்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக ஒரத்தநாடு வந்த நவீன் இது குறித்து வட்டாத்திக்கோட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு சென்று பார்த்த போது, அங்கு சாம்பல் கூட இல்லாததை கண்டு போலீசார் அதிர்ச்சடைந்தனர்.
இதனையடுத்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், தாய் மனைவி ரோஜா, பெரியம்மா பாசமலர் மற்றும் அவரது சகோதரிகள் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.