#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனைவி சுட சுட கொண்டுவந்த சிக்கன் பிரியாணி..! சாப்பிட அனுமதி மறுத்ததால் மருத்துவமனை கண்ணாடியை உடைத்த கொரோனா நோயாளி.!
மனைவி சமைத்துகொண்டுவந்த சிக்கன் பிரியாணியை மருத்துவமனை ஊழியர்கள் சாப்பிடவிடாததால் மருத்துவமனை கண்ணாடியை உடைத்து கொரோனா நோயாளி தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு கீரை உள்ளிட்ட சத்தான உணவுகளை அரசே மூன்று வேலைக்கும் வழங்கிவருகிறது.
இந்நிலையில், நேற்று போத்தனூரை சேர்ந்த 28 வயது கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு அவரது மனைவி சுட சுட பிரியாணி சமைத்து கொண்டுவந்துள்ளார். மனைவி கொண்டுவந்த பிரியாணியை சாப்பிடவேண்டும் என அந்த நபர் செவிலியர்களிடம் கேட்டுள்ளார்.
ஆனால், மருத்துவமனை தரும் சத்தான உணவுகளை மட்டும்தான் சாப்பிடவேண்டும். இந்த உணவுகளுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் அங்கிருந்த தீயணைப்பு கருவி மூலம் மருத்துவமனையின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
செவிலியர்கள் உடனே இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்க, அவர்கள் போலீசாரை சம்பவ இடத்திற்கு வரவைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணைக்கு பிறகு அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளன்னர்.