திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தேவர் ஜெயந்தி விழா.! தடையை மீறி பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்த பெண்கள்!
தேவர் ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை வீரரும் அரசியல்வாதியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளான அக்டோபர் 30ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் இன்று தேசியமும் தெய்வீகமும் எனது இருகண்கள் என வாழ்ந்த தெய்வதிருமகன் முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குரு பூஜை இன்று (அக்டோபர் 30) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேவுள்ள பசும்பொன் கிராமத்தில் ஆண்டு தோறும் பெண்கள் காப்பு கட்டி ஒருவாரம் விரதம் இருந்து பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து பசும்பொன்னாரை வணங்கி செல்வது வழக்கம்.
இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது பிறந்த நாளான இன்று தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படுகிறது.
ஆனால் இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக பால்குடம், முளைப்பாரி நிகழ்விற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தடையை மீறி பெண்கள் வழக்கம்போல் விரதமிருந்து காப்பு கட்டி பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வழிபட்டு வருகின்றனர்.