பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
சதுரகிரியில் கனமழை; மலையில் இருந்து இறங்க பக்தர்களுக்கு தடை: போலீஸ் கண்காணிப்பு..!
மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு அங்கமாக சதுரகிரி உள்ளது. சதுரகிரியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு இறுதி நாளான நேற்று சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தானிப்பாறை பகுதியில் உள்ள அடிவாரத்தில் இருந்து மலைப் பாதை வழியாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பெயத திடீர் மழையால் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளான சங்கிலிபாறை, மாங்கனி ஓடை, பிளாவடி கருப்பசாமி கோவில் ஒடை உள்ளிட்ட நீரோடை பகுதிகளில் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை பெய்ததால் சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் மலையில் இருந்து இறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் மழை பெய்வதற்கு முன்னதாக சாமி தரிசனம் செய்துவிட்டு இறங்கிய பக்தர்கள் ஆபத்தான சங்கிலி பாறை ஒடை, மாங்கனி ஓடை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓடைகளில் நீர் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அந்த ஓடைகளை கடக்க முடியாமல் தவித்தனர்.
இதற்கிடையே அப்பகுதியில் வனத்துறையினர், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு நீரோடை பகுதிகளை பக்தர்கள் கடக்க வேண்டாம் என எச்சரித்தனர். அந்த பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக மீண்டும் நீரோடை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் பக்தர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.