மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'மறக்குமா நெஞ்சம்' விவகாரம் குறித்து விசாரணைக்கு டிஜிபி உத்தரவு!!
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ ஆர் ரகுமான். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் போன்ற பல மொழி படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவர் இசையமைப்பில் வெளியான பல பாடல்கள் மிக பெரிய வெற்றியை பெற்றது. முதன் முதலில் தமிழ் சினிமாவில் 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இவரது இசை பயணம் ஆரம்பமானது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு வெற்றித் திரைப்படங்களில் இசையமைத்து வரும் ஏ ஆர் ரகுமான் தற்போது இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வாறு சமீபத்தில் சென்னையில் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி கடந்த மாதம் நடைபெறவிருந்தது.
இந்நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமாக டிக்கெட்டுகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இசை நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் ரசிகர்கள் திரும்பி சென்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் ஏ ஆர் ரகுமானை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதன் மூலம் பலரும் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் வீணாகி விட்டது என புலம்பி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தையொட்டி, அளவுக்கு அதிகமான கூட்டம் எப்படி சேர்ந்தது? இதனால் போக்குவரத்து நெரிசல் எவ்வாறு ஏற்பட்டது? என்பது குறித்து தாம்பரம் காவல் ஆணையர் விசாரணை நடத்த உத்தரவு.