மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏரிக்கு சென்ற யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு; பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வைரல்.. தர்மபுரியில் சோகம்.!
ஒற்றை காட்டு யானையாக 2 நாட்கள் பாலக்கோடு பகுதியில் வலம்வந்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பாப்பாரப்பட்டி கிராமத்தில் நேற்று காட்டு யானை சுற்றி வந்தது. யானை விலை நிலங்களை சேதப்படுத்திவிட்டு, இன்று கிருஷ்ணாபுரம் பகுதியில் சென்றுகொண்டு இருந்தது.
யானையை கண்ட உள்ளூர் மக்கள் செய்வதறியாது பீதியில் திகைக்க, கம்பைநல்லூர் கெளவல்லி ஏரிக்கரை பகுதிக்கு யானை சென்றுள்ளது. அச்சமயம் யானையின் தலையில் ஏரி திட்டு வழியே சென்ற மின்சார கம்பி உரசியது.
இதனால் மின்சாரம் தாக்கிய யானை நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விஷயம் தொடர்பாக வனத்துறையினருக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் யானையின் உடலை பார்வையிட்டனர். பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததன் வீடியோ வெளியாகியுள்ளது.