திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இளைஞர் அடித்து கொல்லப்பட்டு உடல் கிணற்றில் வீச்சு?.. தர்மபுரி அருகே பரபரப்பு.!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், சங்கிலிவாடி கிராமத்தில் வசித்து வருபவர் செட்டி. இவரது மகன் ஸ்டாலின் (வயது 37). இவர் தனியார் கூரியர் சர்வீஸில், செல்லம்பட்டி பஞ்சாயத்து மோட்டார் ஆபரேட்டராகவும் பணியாற்றி வந்தார்.
நேற்று, இவரின் இருசக்கர வாகனம் கிணற்றின் அருகே நீண்ட நேரமாக இருந்துள்ளதை கண்ட ஒருவர், ஸ்டாலினின் உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இரவு முழுவதும் ஸ்டாலின் வீட்டிற்கும் வராத நிலையில், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என அஞ்சப்பட்டது.
இதனையடுத்து, ஸ்டாலினின் குடும்பத்தினர் அரூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் ஸ்டாலினின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. அவரின் உடலை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், மர்ம மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட வ்சிரணையில், ஸ்டாலின் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்திய நிலையில், அதன்பின்னர் தான் அவரது உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனால் மதுபானம் அருந்தும் போது நண்பர்களுக்குள் ஏதேனும் தகராறு ஏற்பட்டதா? என விசாரணை நடந்து வருகிறது.