மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 வயது சிறுமியை காதலித்து கரம்பிடித்து கர்ப்பமாக்கிய லாரி ஓட்டுநர்; சட்டம் தெரியாமல் சிறைப்பறவையான சோகம்.!
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பொம்மிடி பகுதியில் வசித்து வருபவர் மாதேஸ்வரன் (வயது 25). இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். தேன்கனிக்கோட்டை அருகே இருக்கும் கிராமத்திற்கு அவ்வப்போது பணி நிமித்தமாக சென்று வந்துள்ளார்.
அப்போது, அப்பகுதியை சார்ந்த 16 வயது சிறுமியுடன் இவருக்கு பழக்கம் ஏற்படவே, சிறுமியிடம் காதல் வார்த்தை பேசி தனது வலையில் விழ வைத்திருக்கிறார். இதனையடுத்து மாதேஸ்வரன் சிறுமியின் பெற்றோரிடம் பெண் கேட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
அவர்கள் பெண் தர மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர். இதனால் சிறுமியை திருமணம் செய்ய வற்புறுத்திய மாதேஸ்வரன், நீ இல்லையென்றால் நான் செத்தது மடிவேன் என தற்கொலை மிரட்டல் விடுத்தது கரம்பிடித்துள்ளார்.
இருவரும் சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே, சிறுமி கர்ப்பம் அடைந்த நிலையில், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சிறுமியின் வயதை மருத்துவர்கள் கேட்டபோது, அவர் 16 என்று கூறவே சம்பவம் தொடர்பாக அரூர் மகளிர் காவல் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அதிகாரிகள் போக்ஸோ, குழந்தை திருமணம் உட்பட பல சட்டங்களின் கீழ் வழக்குப்பதிந்து மாதேஸ்வரனை கைது செய்தனர்.