மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரியர் வைத்து 2ம் ஆண்டே படிக்க தொடங்கியதால் மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. தர்மபுரியில் சோகம்.!
தன்னால் தனது நண்பர்களுடன் மூன்றாம் ஆண்டில் படிக்க இயலவில்லையே என்று வருத்தப்பட்ட 21 வயது மாணவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரில் வசித்து வருபவர் கண்ணன். இவரின் மகன் இளம்பரிதி (வயது 21). இவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.ஸ் படித்து வருகிறார். கல்லூரியில் இருக்கும் விடுதியில் தங்கியிருந்தவாறு அவர் படிக்கிறார்.
இந்நிலையில், நேற்று இளம்பரிதியை அவருடன் பயின்று வரும் மாணவர்கள் வெளியே செல்ல அழைத்தபோது, தனக்கு எழுதும் வேலைகள் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் அவர்கள் வெளியே புறப்பட்டு சென்றுள்ளனர். பின்னர், இரவு 07.30 மணியளவில் அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது இளம்பரிதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுரி நகர் காவல் துறையினர் இளம்பரிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இளம்பரிதி எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது.
அந்த கடிதத்தில், "என்னால் நன்றாக படிக்க இயலவில்லை. நான் நல்ல மருத்துவராக உருவாக முடியாது. ஆதலால் தற்கொலை செய்துகொள்கிறேன். அப்பா, அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்" என்று எழுதியுள்ளார். விசாரணையில், அவர் கடந்த தரவில் தோல்வி அடைந்தமையால் மூன்றாம் ஆண்டுக்கு செல்லாமல் 2ம் ஆண்டிலேயே படித்து வருகிறார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அவர் தற்கொலை செய்தது உறுதியானது.
இளம்பரிதியின் தந்தை லாரி ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், அவருக்கு ஒரே மகன் என்பதால் துக்கம் தாளாது கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.