மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் தங்கச்சிய காதலிக்கிறியா?.. கல்லூரி வாசலில் அமீர் நடத்திய கலவரம்., பிளான் மிஸ்ஸாகி பயங்கரம்.!
தங்கை மற்றும் அவரின் காதலனை கண்டித்தும் இருவரும் காதலை கைவிடாத காரணத்தால் பெண்ணின் அண்ணன் தங்கையின் காதலனை கொலை செய்ய முயற்சித்து அது தோல்வியில் முடிந்த சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், வெங்கடேஸ்வரா நகரை சார்ந்தவர் அமீர் (வயது 19). இவருக்கு தங்கை இருக்கிறார். தர்மபுரியை சார்ந்தவர் மாதேஷ். மாதேஷும், அமீரின் தங்கையும் பாலக்கோடு அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்றாலும் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டு, பின்னாளில் அது காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவகாரம் பெண்ணின் அண்ணன் அமீருக்கு தெரியவரவே, தங்கையை பலமுறை கண்டித்து காதலை கைவிட அறிவுறுத்தியுள்ளார்.
அண்ணனின் அறிவுரையை கேட்காத தங்கையோ, வயது கோளாறில் காதலனுடன் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமீர் மாதேசை கண்டிக்க, இருவரும் காதலை கைவிடாமல் இருந்துள்ளனர். இதையடுத்து, மாதேசை கொலை செய்திடலாம் என அமீர் திட்டமிட்டு இருக்கிறார்.
இவரின் திட்டப்படி நண்பர்களுடன் காரை எடுத்து வந்து மாதேசை கல்லூரி வாசலிலேயே தாக்கி இருக்கின்றனர். மாணவன் அடிவாங்குவதை கண்டு சக மாணவர்கள் வந்துவிட, சிக்கிய அமீரின் நண்பர்களை நையப்புடைத்து இருக்கின்றனர். பின்னர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் மாதேசை கொலை செய்யும் நோக்கத்தோடு வந்தது அம்பலமானது. தப்பி சென்ற மாதேஷை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர். மொத்தமாக மாதேஷ், அவரின் நண்பர்கள் 4 பேர் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.