மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சொத்தில் பங்கு தர மறுத்த தந்தை வெட்டிக்கொலை.. தர்மபுரியில் பயங்கர சம்பவம்.!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, எருதுகூடஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் முனியப்பன் (வயது 75). இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் மற்றும் 1 மகன் பிள்ளைகளாக உள்ளனர். இவரது மகன் மாது (வயது 35).
முனியப்பனின் மனைவி முனியம்மாள், கடந்த 25 வருடத்திற்கு முன்னதாகவே உயிரிழந்துவிட, முனியப்பன் தனது மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது.
இந்த நிலத்தை மகள்களுக்கு பிரித்து கொடுக்க முனியப்பன் முடிவெடுத்திருந்த நிலையில், அவரின் மகன் மாது தனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என தகராறு செய்து வந்துள்ளார். மகனின் எதிர்ப்பையும் மீறி ஒரு ஏக்கர் நிலத்தினை முனியப்பன் விற்பனை செய்துள்ளார்.
இதனால் மாதுவுக்கு பெரும் ஆத்திரம் ஏற்படவே, நேற்று தந்தையின் வீட்டிற்கு சென்றவர், முனியப்பனை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த முனியப்பன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார்.
பின்னர், மாது அங்கிருந்து தப்பி செல்லவே, கொலை சம்பவம் தொடர்பாக மாரண்டஹள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முனியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சொத்து தகராறில் தந்தை மகனால் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, மாதுவை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அவரின் மகள்கள் மற்றும் மனைவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.