மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 வயது சிறுமியை சீரழித்து கர்ப்பிணியாக்கிய 57 வயது காம கொடூரன்.. திண்டுக்கல்லில் அதிரவைக்கும் சம்பவம்.!
கட்டிட தொழிலாளி 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான். தற்போது சிறுமி கர்ப்பிணியாக இருக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடகாடு, சுரைக்காய்பட்டி பகுதியில் வசித்து வருபவன் ராமர் (வயது 57). இவன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறான். இதே பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார்.
இந்நிலையில், சிறுமிக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
அப்போது, சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிடம் விசாரிக்கையில் ராமர் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறயினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ராமரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.