மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அந்த விஷயத்திற்கு" வற்புறுத்திய 46 வயது கள்ளக்காதலி கல்லால் அடித்து கொலை.. 18 வயது சிறுவனுடன் கள்ளக்காதல் பழக்கத்தால் விபரீதம்.!
4 ஆண்டுகளாக சிறுவனுடன் கள்ளக்காதல் உல்லாசத்தில் இருந்து வந்த பெண்மணி, இறுதியில் குழவிகல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பன்றிமலை, மலையாண்டிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன். இவரின் மனைவி செல்வி (வயது 46). தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறார். கணேசன் சோலைக்காடு அருகே நிலத்தை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் அவ்வப்போது கணேசனின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளான்.
மேலும், தச்சு தொழிலாளியாக இருந்து வரும் சிறுவன், எப்போதும் கணேசனை மாமா என்று அன்புடன் அழைத்து வந்ததால் சந்தேகமும் ஏற்படவில்லை. இவ்வாறாக வீட்டிற்கு வந்து சென்ற சிறுவனுடன் செல்வி கள்ளக்காதல் பழக்கத்தை ஏற்படுத்த, இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இரவு நேரங்களில் கணேசன் தோட்டத்தில் வனவிலங்கு அச்சுறுத்தலை கட்டுப்படுத்த சென்றுவிட, சிறுவன் செல்விக்கு துணையாக இருந்து வந்துள்ளான். இதனால் இருவருக்குள்ளும் ஒருகட்டத்தில் கள்ளக்காதல் மலர்ந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அக்கம் பக்கத்தினருக்கும் எவ்வித சந்தேகமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், செல்வியின் வீடு நேற்று திறக்கப்படாமல் இருக்கவே, அக்கம் பக்கத்தினர் சென்று பார்க்கையில் அவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மிதந்தார். இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக கன்னிவாடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், பன்றிமலையில் பதுங்கியிருந்த சிறுவனிடம் நடந்த விசாரணையில், சம்பவத்தன்று செல்வி தன்னை கட்டாயப்படுத்தி செக்ஸ் வைத்துக்கொள்ள வற்புறுத்தியதால் அவரை தள்ளிவிட்டுள்ளார்.
அந்த சமயத்தில், அவரின் தலை கல் மீது பட்டு மயங்கியுள்ளார். பின்னர் செல்வியை அருகே இருந்த குழவிக்கல்லை எடுத்து சிறுவன் தாக்கி கொலை செய்துள்ளான். இதன்பின்னர் அங்கிருந்து மலைப்பகுதிக்கு தப்பி சென்று பதுங்கி இருந்துள்ளான் என்பது அம்பலமானது. சிறுவனை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.