திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
17 வயது சிறுமி கர்ப்பம்; கருக்கலைப்பு செய்ததால் பரிதாப பலி..! திண்டுக்கல்லில் சோகம்.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் 17 வயது சிறுமி பெற்றோர் இன்றி, தனது பாட்டியின் வீட்டின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இவர் காந்திகிராமம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரியில், விடுதியில் தங்கியிருந்தவாறு பயின்று வருகிறார்.
இந்நிலையில், விடுதியில் இருந்த மாணவியை திருச்சியில் வசித்து வந்த அத்தை மீனாட்சி என்பவர் நேரில் வந்து பார்த்தபோது, அவரின் உடல்நலத்தில் மாற்றம் தெரிந்துள்ளது. இதனால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துசென்றபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியானது.
கர்ப்பம் குறித்து விசாரித்தபோது ராம்குமார் என்ற நபருடன் காதல் வயப்பட்டு கர்ப்பமானது தெரியவந்துள்ளது. இதனால் கருக்கலைப்புக்கு முயற்சித்தது சிறுமி சிகிச்சை பலனின்றி பலியாகி இருக்கிறார்.
ஆபத்தான கட்டத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழக்கவே, காவல் துறையினர் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதில் மேற்கூறிய தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, சிறுமியின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
சிறுமியின் காதலன் ராம்குமார், சிறுமியின் அத்தை மீனாட்சி, கருக்கலைப்பு செய்த மருத்துவர் என 3 பேரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.