தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
'வாரிசு சான்றிதழ் வேணும்னா 8000 ரூபாய் கொடு' திமிறிய வருவாய் ஆய்வாளர் சிக்கியது எப்படி?!!
திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒட்டன்சத்திரம் தாலுக்கா. இங்கு, பாண்டியன் என்பவர் காவேரியம்மாபட்டியில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் வசித்து வரும் மாரிமுத்து என்பவர் அவரது தந்த வேலுச்சாமியின் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பம் செய்திருந்தார்.
இதனால் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ஆய்வாளர் பாண்டியன் 8000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து மாரிமுத்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு, இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அவர் அளித்த தகவலின் படி காவல்துறையினர் மாரிமுத்துவிடம் 8000 ரூபாய் பணத்தை ரசாயனம் தடவி கொடுத்துள்ளார்.
இதனை ஆய்வாளரிடம் கொடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் மாரிமுத்து ரசாயன தடவிய 8000 ரூபாய் பணத்தை ஆய்வாளர் பாண்டியனிடம் லஞ்சமாக கொடுத்துள்ளார்.
பின்னர் தக்க நேரத்திற்காக காத்திருந்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் இருந்த போலீசார் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் பாண்டியனை கையும் களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.