மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரை டவுசர் கஞ்சா குடிக்கிகள் அட்டகாசம்.. உணவகத்தில் புகுந்து காசாளர் கொலை முயற்சி.. பரபரப்பு சம்பவம்.!
கஞ்சா போதையில் உணவகத்திற்குள் புகுந்து ஊழியர்களை உருட்டு கட்டையால் தாக்கிச் சென்ற இளைஞர்கள் குறித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் சாலையில் உள்ள வீரன் நகரில், காரைக்குடி உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு 3 அரை டவுசர் ஆசாமிகள் வந்து கஞ்சா புகைத்துள்ளனர். இதை கண்ட உணவக ஊழியர் தட்டி கேட்டுள்ளார்.
இதனால் மூன்று வாலிபர்களும் உணவக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கஞ்சா போதையில் இரும்பு கம்பி மட்டும் மரக்கட்டையை எடுத்து ஊழியர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் உணவகத்தின் காசாளர் கருணாநிதி தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்துள்ளார்.
அவரை மீட்ட சக ஊழியர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பாக சி.சி.டி.வி கேமிரா ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ராம்தி நகர் கள்ளிக்குடி பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவனை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் ஜெகதீசன், அஜித்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.