மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்லூரி காதல்.. சென்னையில் திருமணம்..! கருக்கலைப்பு செய்து கைவிட்ட காதலன்.. எஸ்.பி ஆபிசில் பெண் போராட்டம்.!
காதல் திருமணம் செய்து மூன்று மாதம் வாழ்ந்த காதல் கணவன் கைவிட்டு சென்றதால், காதல் கணவருடன் சேர்த்து வைக்க கூறி, திண்டுக்கல் எஸ்.பி ஆபிசில் பெண் தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். காதலிச்சான், கரம்பிடிச்சான், கருக்கலைப்பு செஞ்சி கைவிட்டுட்டான்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விராலிப்பட்டி கிராமத்தை சார்ந்தவர் பெருமாள். இவரது மகள் கௌசல்யா. ஒட்டன்சத்திரம் கண்ணனூர் பகுதியை சார்ந்தவர் மகுடீஸ்வரன். கௌசல்யாவும் - மகுடீஸ்வரனும் திண்டுக்கல் ஐ.டி.ஐ-யில் பயின்று வரும் போது காதலித்து வந்துள்ளனர்.
இதன்பின்னர், சென்னையில் பணியாற்றி வருகையில் இருவரும் ஒன்றாக வேலைக்கு சேர்ந்து, சென்னையில் திருமணம் செய்து குடும்பம் நடத்தி இருக்கின்றனர். இருவரும் 3 மாதமாக ஒன்றாக சேர்ந்து வசித்து வந்த நிலையில், சொந்த ஊருக்கு ஒன்றாக சென்றுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, கௌசல்யா கர்ப்பமான நிலையில், இந்த தகவலை அறிந்த மகுடீஸ்வரன், காதல் மனைவியை பரிசோதனைக்கு செல்லலாம் என கூறி அழைத்து சென்று, திட்டமிட்டு மயக்க மருந்து செலுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார். இதன்பின்னர், கௌசல்யாவை மகுடீஸ்வரன் கைவிட்டு பிரிந்து சென்றுள்ளார்.
இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய கௌசல்யா, மகுடீஸரானின் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்கவே, மகுடீஸ்வரனின் உறவினர்கள் கௌசல்யாவிடம், "உங்களின் ஜாதிக்கும் எங்களின் ஜாதிக்கும் சரிப்பட்டு வராது. நீங்கள் பிரிந்து சென்றுவிடுங்கள்" என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து, கௌசல்யா ஒட்டன்சத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கௌசல்யா, அவரது தந்தை, தாய் என 3 பேர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தர்ணா போராட்டத்தை கவனித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை செய்து, புகார் மனுவை நேரடியாக பெற்றுக்கொண்டு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.