மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் 143 மக்கள்.. காதல் ஜோடிகளே செல்பி எடுக்க மறந்துவிடாதீங்க.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும். இங்கு சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, வெள்ளி அருவி உட்பட பல பகுதிகள் பிரதானமான இடங்களாக இருக்கின்றன.
கோடை சீசன் சமயங்களில் ஒருகோடி மலர்கள் இங்கு பூக்கும். தற்போது குளிர்கால சீசன் என்பதால், குறைந்தளவிலான பூக்கள் இருக்கின்றன. ஆனால், குளிர்காலத்தில் மட்டும் பூக்கும் அபூர்வ பூக்களும் இங்கு நிறைந்துள்ளன.
இந்நிலையில், தற்போது கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் காஸ்மோஸ் மலர்கள் பூத்துள்ளன. 8 இதழ்கள் கொண்ட மலர்கள், 143 பூக்கள் என்றும், ஐ லவ் யு பூக்கள் என்றும் காதலர்கள் மத்தியில் அறியப்படுகிறது.
இதனால் அங்கு வரும் பல்வேறு சுற்றுலாப்பயணிகளை 143 மலர்கள் முன்னிலையில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.