மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
17 வயது சிறுமி ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம்; டீக்கடை மாஸ்டர் போக்ஸோவில் கைது.!
பள்ளியில் படித்து வரும் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அமையநாயக்கனூர் திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றி வருபவர் ரமேஷ் (வயது 39).
இவர் அப்பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறிய ரமேஷ், அவரை பலாத்காரம் செய்ததாக தெரியவருகிறது.
இதனால் சிறுமி கர்ப்பமாகவே, விஷயம் அவரின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. பெற்றோர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் ரமேஷின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சியாமளா அளித்த புகாரின் பேரில், நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகன் தலைமையிலான அதிகாரிகள் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.