இரயில்வே கேட்டை மூடவிடாமல் ஆளும்கட்சி தரப்பு அட்டகாசம்; விரைந்து செல்ல விபரீத விளையாட்டு.!



Dindigul Nilakottai Railway Gate Issue 

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் ரூ.13 இலட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது. 

சாலை திறப்பு விழாவுக்கு பழனி எம்.எல்.ஏ செந்தில் குமார், திண்டுக்கல் எம்.பி வேலுசாமி உட்பட ஆளுங்கட்சியினர் அழைக்கப்பட்டனர். பட்டாசு வெடித்து வரவேற்பு வழங்கப்பட்டது. 

பல இருசக்கர வாகனம், 10க்கும் அதிகமான கார்களில் திமுகவினர் வருகை தந்திருந்தனர். அப்போது, கொடைரோடு பகுதிக்கு இவர்களின் அணிவகுப்பு வாகனம் வந்தது. 

அச்சமயம் திருநெல்வேலியில் இருந்து மும்பை நோக்கி பயணித்த தாதர் அதிவிரைவு இரயில் தண்டவாளத்தில் வந்ததால், கேட் கீப்பர் இரயில்வே கதவை மூடி இருக்கிறார். 

அந்த கனபொழுது நேரத்தை கூட விடக்கூடாது கார்களில் முண்டியடித்த திமுகவினர், தங்களது எம்.எல்.ஏ மற்றும் எம்.பி கார்கள் செல்ல வழியை ஏற்படுத்தி இருக்கின்றனர். 

இதனைக்கண்ட உதவி காவல் ஆய்வாளர் கருப்பையா வழியை சீர்படுத்தி இரயில்வே கேட்டை மூட உதவினார். இதன்பின் சில நொடிகளில் இரயிலும் கடந்து சென்றது.