53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
உஷாவின் வலையில் விழாதீங்கப்பா... பேஸ்புக் காதலனை மிரட்டி பணம்பறிக்க முயற்சி: இளம்பெண் உட்பட 3 பேர் கைது.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, கொங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குருவையா. இவர் பூ வியாபாரி ஆவார். மகன் ரோஷன் (வயது 27). கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி, கோவில்பாளையத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவரின் மகள் உஷா (வயது 31).
உஷாவும் - ரோஷனும் முகநூலில் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், உஷாவின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட ரோஷன், அவருடன் பேசுவதை தவிர்த்ததாக தெரியவருகிறது. உஷா தொடர்ந்து ரோஷனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார்.
இதனால் ரோஷன் உஷாவின் நம்பரை பிளாக்கில் போட்டுள்ளார். இது உஷாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே, அவர் ரோஷனின் பேஸ்புக் பக்கத்தில் இருந்த போட்டோவை பதிவிறக்கி, போஸ்டரை அடித்து தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக நிலக்கோட்டை பகுதியில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
குருவையா பூ மார்க்கெட்டிற்கு வந்தபோது, அவரை மறித்த உஷா, சவுந்தரராஜன் (வயது 55), சிவஞானம் (வயது 45), கிருஷ்ணவேணி (வயது 40) ஆகியோர் ரூ.5 இலட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் குருவையா புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் உஷா என்ற கமேலேஸ்வரி (வயது 31), சிவஞானம், கிருஷ்ணவேணி ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.