5 மாத கைக்குழந்தையை கொலை செய்த கொடூர தாய் - பதைபதைப்பு வாக்குமூலம்.. அதிர்ச்சியில் தமிழகம்.!



Dindigul Palani 5 Month Baby Killed by Mother

மகன் பிறந்த நேரம் சரியில்லாததால் வீட்டில் பிரச்சனை நடக்கிறது என்று எண்ணிய தாய், தான் ஈன்றெடுத்த குழந்தையை ஐந்தே மாதத்தில் கொன்ற பயங்கரம் திண்டுக்கல்லை அதிரவைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, ராசாபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி லதா (வயது 25). தம்பதிகளுக்கு கவின் என்ற 3 வயது மகன் இருக்கிறார். கடந்த 5 மாதத்திற்கு முன்னதாக தம்பதிக்கு 2 ஆவதாக ஆண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தைக்கு கோகுல் என பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர். கடந்த 21 ஆம் தேதி மகேஸ்வரன் வேளைக்கு சென்றுவிட, அருகேயிருந்த கடைக்கு சென்று வீட்டிற்கு வந்த லதா குழந்தையை காணவில்லை என்று கூறியுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை காவல் துறையினர் 5 மாத கைக்குழந்தை கோகுலை தேடி வந்தனர். இந்நிலையில், குழந்தை பாலாறு - பெருந்தலாறு அணைப்பகுதியில் உள்ள புதரில், நீரில் மூழ்கி இறந்து கிடந்துள்ளது. 

குழந்தையின் சடலத்தை மீட்ட அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர விசாரணையில், குழந்தையை பெற்றெடுத்த தாயே மகனை கொலை செய்த திடுக்கிடும் தகவல் அம்பலமானது. இதுதொடர்பான வாக்குமூலத்தில் லதா கூறியதாவது, "எங்களுக்கு கடந்த 5 வருடம் முன்பு திருமணம் நடைபெற்றது. முதலில் கவின் என்ற ஆண் குழந்தை பிறந்தார். இரண்டாவதாக கடந்த 5 மாத்திற்கு முன்னதாக கோகுல் என்ற குழந்தை பிறந்தார். அவர் பிறந்ததில் இருந்து எனக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. 

Dindigul

எனது குடும்பத்திலும் அடிக்கடி சண்டை வந்தது. இதுபோதாதென, கோகுலுக்கு மூச்சுத்திணறல் உட்பட உடல் உபாதை ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை அளித்தும் பலனில்லை. இதனால் ஜோதிடரிடம் மகனின் பிறந்த நாள், நட்சத்திர விபரத்தை கேட்டு வந்தேன். அவர் மகன் பிறந்த நேரம் சரியில்லை என்பதால் பிரச்சனை நடக்கும். காலப்போக்கில் அது சரியாகிவிடும். இது தாற்காலிகமாகே, எதற்கும் பயப்பட வேண்டாம் என்று கூறினார்.

அவரின் வார்த்தை உண்மையாக இருந்தாலும், எனக்கு மகன் பிறந்தபின் ஏற்பட்ட பிரச்சனை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு, வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் போட்டு மகனை கொலை செய்தேன். உடலை அணைக்கரையில் வீசி வந்த நிலையில், விசாரணையில் நான் சிக்கிக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார். லதாவை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.