"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
உழைக்க வந்தவரை அடித்து விரட்டிய செல்போன்கடை சில்வண்டு.. காப்பு போட்ட போலீஸ்.. உழைக்கிறவங்களை வாழவிடுங்கப்பா..!
உரிய விலையில் பொருட்கள் விற்பனை செய்தவரிடம், நான் கடைக்கு வாடகை எப்படி கொடுப்பேன் என வாயை கொடுத்து கன்னத்தில் அறைந்த சில்வண்டு காவலர்களால் கைது செய்யப்பட்டான்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பேருந்து நிலையத்தில், கைப்பையில் செல்போன் கவர்களை வைத்துக்கொண்டு பேருந்துகளில் பயணம் செய்யும் பயனியர்களிடம் ரூ.50 க்கு ஒருவர் விற்பனை செய்து வந்துள்ளார்.
இதனால் பேருந்து நிலைய வளாகத்திற்குள் இருக்கும் செல்போன் கடையில் விற்பனை பாதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதில் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர் சுதாகர் என்பவர், உழைக்க வந்த நபரை நிறுத்தி எங்கிருந்து வருகிறாய்? என விசாரிக்கிறார்.
அவரின் செயல்பாடுகளால் தனது விற்பனை பாதிக்கிறது என்று ஆதங்கத்தில் பொங்கும் உரிமையாளர் சுதாகர், இனி நீ பழனிக்கு வரக்கூடாது என கன்னத்தில் அறைகிறார்.
இந்த விஷயம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. பாதிக்கப்பட்டவர் தனது நிலைமை குறித்து வீடியோ வெளியிட்டார். மதுரையை சேர்ந்த ராஜா என்பவர் பல வேலைகள் இன்றி அவதிப்பட்டுள்ளார்.
இறுதியாக சுயமாக உழைத்து முன்னேறலாம் என நினைத்த ராஜா, ரூ.10 ஆயிரம் முதலீடு செய்து செல்போன் கவர் வாங்கி ஊர் ஊராக பல இடங்களுக்கு கால்கடுக்க நடந்து சென்று செல்போன் கவர் விற்பனை செய்துள்ளார். இவ்வாறாக அவர் பழனி வந்தபோது சுதர்சன் அவரை தாக்கி இருக்கிறார்.
இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான காரணத்தால், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பழனி காவல் துறையினர் சுதர்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.